ஆவாரம் பூ துவையல் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்

ஆவாரம் பூ துவையல் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்





காடுகளிலும், ஈரமான நிலப் பகுதிகளிலும் கற்பாறை 

இடுக்குகளிலும், வீட்டின் ஓரங்களிலும் நன்கு வளரக் கூடியது. 

குறுஞ்செடியாகவும், குறுமரச் செடிகளாகவும் வளரும்.

இதன் பூக்கள் கண்ணைப் பறிக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப்

 பூக்களாக மலர்ந்து இந்த பூவின் மடல்கள் அழகாக மஞ்சள் நிறத்துடனேயே 

காட்சியளிக்கும். புளியன் மரத்து இலைகளைப் போல், சற்று பருமன் பெரிதாக, மெல்லிய 

தட்டையான காய்களைக் கொண்டிருக்கும்.


வாடாத பூச்சியில்லாத பூ மடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 

கொஞ்சம் பொறுமையாக பறிக்க வேண்டும். சகிப்பு தன்மையோடு 

150 கிராமோ அல்லது 200 கிராமோ பறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்


ஆவாரம் பூ மடல்கள்


: 100


கிராம்


(அ)


150 கிராம்


பட்டுள்


பிறகு


துரு


தேங்


எண்ணெய்


50 மில்லி


3


மிளகாய்


வெங்காயம்


100 கிராம்


: 25 கிராம்


பூண்டு


இஞ்சி


கோலியளவு


புளி


கோலியளவு


தக்காளி


3


பெருங்காயப் பொடி


3 சிட்டிகை


25 கிராம்


பாசிப்பருப்பு


உப்பு


தேவையான அளவு


தாளிக்க


வடகம் (அ) கடுகு


1 கொத்து


மல்லி இலை


செய்முறை


வெங்காயம், மிளகாய், பூண்டு,

 தக்காளி, இஞ்சி


போன்றவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும். பாசிப் பருப்பை தனியாக பொன் வறுவலாக வறுத்தெடுத்து சூடு ஆறியவுடன்

 உரலிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு தேவையான அளவு தண்ணீர் 

கலந்து ஆட்டிக் கொண்டுஇறுதியில் 

மல்லி இலைகளையும் சுத்தம் செய்து

 வைக்கப் பட்டுள்ள ஆவாரம் பூ 

மடல்களை வதக்காமல் வேகவைக்காமல் அப்படியே போட்டு மைய 

ஆட்டிக் கொள்ளவும்.

 பிறகு தாளித்துக் கொள்ளவும். தேவையெனில் தேங்காய் துருவல்

 தூவி கலந்து கொள்ளலாம். சுவை கூடும். தேங்காய் துருவலைக் கலந்து விட்டால் நான்கு

 அல்லது ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது.


மூலிகை குணங்கள்


உடலை மெல்ல மெல்ல பொன்னிறமாக்கும்.

பளபளப்பாக வைக்கும். 

மேக வெட்டை, உடலின் உட்சூடு, உடலின் வேர்வையால் ஏற்படும் நாற்றம் நீங்கும். பலக் குறைவால் ஏற்படும் அசதி, 

மூச்சுத் திணறல் நீங்கும். தோல் வறட்சி, தோல் வெடிப்பு, எரிச்சல் தீரும். வெப்பத்தால் ஏற்படும் சிறுநீரில் எரிச்சல்,

 பெண்களின் பெரும்பாடு, தாகம் தீர்த்து சுகமளிக்கும். கண்ணெரிச்சல், 

கண் நோய் குணமாகும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும்.

Post a Comment (0)
Previous Post Next Post