நாயுருவி மூலிகையின் மருத்துவ குணங்கள்

நாயுருவி மூலிகையின் மருத்துவ குணங்கள்




ஈரமான பகுதிகளில் செடி கொடி, மரங்களுக்கு
இடையிலும், காடுகளிலும், வேலி மற்றும் தண்ணீர் ஓடும்
 வாய்க்கால் ஓரங்களிலும் செடிகளாக வளர்கிறது. 
4 அடிகள் முதல் 5 அடிகள் வரை வளரும். நாயுருவியில் இரண்டு வகைகள் உண்டு. வெள்ளை மற்றும் கருப்பு நாயுருவி ஆகும்.
 இரண்டுமே சமமான ஒரே விதமான
மேன்மையான மூலிகை குணங்கள் கொண்டவை.
இதன் பூவும் 
காய்களும், விதைகளும் நீண்ட கதிர் கொத்தைப் போல 
அடுக்கி வைத்தாற் போல், அந்தக் காய் விதைகளும் மிகவும் சிறு சிறு மூட்களாய் இருக்கும் கால்நடைகளோ அல்லது நாமோ
 சென்றால் உடைகளில் மற்றும் சதை பகுதிகளிலும் மாட்டிக் கொண்டு ஒட்டிக் கொள்ளும். 
இறைவன் இந்த தாவரத்தின் பெருக்கத்தை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மேற்கண்ட வழிகளில்
 பரப்புகிறான்.

தேவையான பொருட்கள்


நாயுருவி


இலைகள்


கால் கிலோ


மிளகாய்


4


4


மிளகு


50 மில்லி


50 கிராம்


எண்ணெய் (அ) நெய் :


பாசிப்பயறு


மல்லி இலை


1கொத்து


கறிவேப்பிலை


1 கொத்து


25 கிராம்


உளுத்தம் பருப்பு


மிளகளவு


பெருங்காயம்


கோலியளவு


தேவையான அளவு


புளி


உப்பு


தக்காளி


1


வெங்காயம்


:


:


:


:


50 கிராம்


செய்முறை


பாசிப்பயிறையும், உளுந்தம் பருப்பையும் பொன் வறுவலாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். 

இக்கீரையை வாணலியில் நன்றாக, பச்சை வாசனை மறையும் வரை கறுகாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.


 அடுத்து மற்ற மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும், வறுத்தும்,

 வதக்கியும் எடுத்து ஆறியபின் ஆட்டிக் கொள்ளவும் துவையல் தயார்.


மூலிகை குணங்கள்


சாவையே தடுக்கும் குணம் கொண்டது சித்தர்களால் போற்றப்பட்டது.

 அதற்காக வேகமாக வரும் இரயிலோ அல்லது பேருந்து முன்னால் நின்றால் விடத்து ஏற்படாது என்று அர்த்தமல்ல.

 அதாவது, நோய்களைத் தடுக்கும் மகா சக்தி கொண்டது.


உடலுக்கு உஷ்ணத்தைதரக்கூடியது. நுரையீரல் சம்பந்தமான

 நோய்களைக் குணப்படுத்தும்.

 முகத்திற்கு அழகூட்டக் கூடியது.


வயிற்று நோய்களை குணப்படுத்தும். கபத்தைப் போக்கும். 

மூல நோய்களையும் குணமாக்கும். இரத்தத்தில் உள்ள கிருமிகளை அகற்றும் சக்தி கொண்டது. 

நரம்பத் தசை மற்றும் மூளையை வலுவூட்டச் செய்யும். 

ஆறாத புண்களை ஆற்றி விடும். கண், காது, மூக்கு, இதய 

நோய்களை குணப்படுத்தும்.

Post a Comment (0)
Previous Post Next Post