புளியன் கொழுந்து மூலிகையின் மருத்துவ குணம் மற்றும் இறையன்பு சட்னி செய்முறை
நாம் அன்றாடம் சாம்பாருக்கு பயன்படுத்தப்படும் புளியின் மரம் தான், அக்காலங்களில் சாலை ஓரங்களில் நிழல் தருவதற்காகவும்,
அதே சமயத்தில் அரசுக்கு வருடா வருடம் புளியின் மகசூல் மூலம் ஒரு நிரந்தர வருமானம் பெறவும், போக்குவரத்து சாதனங்கள் வெளியிடப்படும்.
கழிவு புகைகளை ஈர்த்துக் கொள்ளவும். காற்றை பாதுகாக்கவும் சாலையோரங்களில் நடப்பட்டன.
பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த மரம் தான். தற்சமயம் மேட்டு
நிலங்களிலும் கூட தனியாகவே நற்று வேளாண்மைப் போல் செய்கின்றனர்.
இந்த மரத்தின் கொழுந்துகளை மட்டும் பறித்து துவையலாக பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
புளியன் கொழுந்து உளுந்தம் பருப்பு
கால் கிலோ
: 50 கிராம்
மிளகாய்
4
வெங்காயம்
100 கிராம்
25 கிராம்
பூண்டு
இஞ்சி
கோலியளவு
எண்ணெய்
50 மில்லி
3
தக்காளி
தாளிக்க
வடகம்
புளி
உப்பு
கோலியளவு
தேவையான அளவு 2 சிட்டிகை
பெருங்காயத் தூள் கொத்தமல்லி இலை :
5 கிராம்
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி புளியின் கொழுந்துகளை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றப் பொருட்களான வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, இஞ்சி, பெருங்காயத் தூள், மல்லி
இலைகளை வதக்கி எடுத்துக் கொண்டு ஆறிய பின் எல்லாவற்றையும்
கலந்து ஆட்டிக் கொண்டு தாளித்துக் கொள்ளவும். துவர்ப்பு கலந்த சுவையுடன் இருக்கும்.
புளியன் பூ சட்டினி வேறுமுறை
மேற்கூறிய முறையிலேயே
புளியன் கொழுந்து
களுக்கு பதிலாக புதியதாக
பூக்கப்பட்டுள்ள பூக்களை மட்டும் பறித்து, சுத்தம் செய்து
பயன்படுத்தலாம். இப் பூக்களில் சிறிது துவர்ப்பும் இனிப்பும்
கலந்திருக்கும். இத் துவையலும் ஒரு வகையான சுவையுடன் ருசிக்கும்.
மூலிகை குணங்கள்
அறுசுவைகளில் புளிப்பு சுவையும் ஒன்று. புளிப்பு சுவையும் உடலுக்கு அவசியம் தேவைதான்.
உடலில் சேரும் நச்சுத் தன்மையை அகற்றும். இருமலைப் போக்கும். மந்தமான சோம்பேறித் தன்மையையும் அகற்றுகிறது.
மூல வியாதிகளை குணப்படுத்துகிறது.
பித்தத்தைத் தணிக்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீர்படுத்துகிறது. வெப்ப உடலுக்கு
மிதமான குளிர்ச்சியைத் தருகிறது. பாண்டு ரோகத்தை குணமாக்கும். கண் தொடர்பான
பிணிகள் நீங்கும். உடலில் உள்ள ரணங் களையும், வெளி ரணங்களையும் ஆற்றும். பித்தத்தை சமனாக்கி வயிற்று உப்பிசத்தை நீக்கும்.