தும்பை மூலிகையின் குணங்கள் மற்றும் மருத்துவ பயன்பாடுகள்
ஒரு மரத்தின் வடிவத்தில் மிகவும் சிறிய அளவில் வளரும் குருஞ்செடி.
எதிர்புற அடுக்கில் நீண்ட கூர்மையான கரும் பச்சை இலைகளைக் கொண்டது. நாற்கர வடிவில் இதன்
தண்டுகளிருக்கும். முளை விட்டு முளைக்கும் போது
ஒரே தண்டுடன் வளரும்.
செடி பெரியதானதும் கிளைகளாக பிரிந்து வளரும். பாத வடிவத்தில் இதன் பூக்கள் சிறியதாக
வெண்ணிறத்தில் இருக்கும். செண்டு போன்ற வடிவத்தில்
பலப் பூக்களைப் பெற்றிருக்கும். இடைவெளி விட்டு
தண்டுகளில் செண்டு செண்டாக அடுக்கடுக்காக இருக்கும். மழைக் காலங்களில் எல்லா இடங்களிலும் தானே வளரக் கூடியது.
ஈரமுள்ள இடங்களில் எல்லாப் பருவங்களிலும் வளரும்.
கால்நடை ஜீவராசிகள் கூட இவற்றை முகர்ந்து விட்டு பெரும்பாலும் உண்பதில்லை.
ஆனால் இதிலும் மகா மூலிகை குணங்களுள்ளது.
தேவையான
பொருட்கள்
: 300 கிராம்
தும்பை இலைகள்
(சுத்தம் செய்யப்பட்டது)
மிளகாய்
: 3
வெங்காயம்
: 100 கிராம்
பூண்டு
இஞ்சி
: 25 கிராம்
: கோலியளவு
புளி
தக்காளி
: கோலியளவு
: 4
பெருங்காயப் பொடி
: 2 சிட்டிகை
மல்லி இலை பாசிப்பருப்பு
2 கொத்து
25 கிராம்
தாளிக்க
கடுகு, கரு வேப்பிலை
செய்முறை
தும்பை இலை ஒரு விதமான வெகுட்டு வெப்பச் சுவைக் கொண்டது.
முதலில் உணவில் துவையலாக பயன் படுத்தும் பொழுது அச்சுவை ஒரு வித வெறுப்பாகத் தோன்றலாம்.
பயப்பட வேண்டாம். அதற்காக, தும்பையை வாணலியில் வதக்க வேண்டாம்.
தும்பையைத் தவிர மற்ற பொருட்களை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பாசிப் பயிரை பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும்.
தும்பையை மட்டும் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பிறகு கலந்துள்ள தண்ணீரை வடிகட்டிக் கொண்டு தண்ணீரை கீழே ஊற்றி விடவும்.
அத்தண்ணீரில் தும்பை இலையின் வெகுட்டு தன்மை கலந்திருக்கும். இப்பொழுது சூடு
ஆறிய பின் உரலில் போட்டு மைய ஆட்டிக் கொண்டால் தும்பைத் துவையல் தயார்.
பிறகு தாளித்துக் கொள்ளவும்.
மூலிகை குணங்கள்
நெஞ்சிலுள்ள கோழைகளை அகற்றும். உடலை திடப்படுத்தும்.
குளிர்ந்த உடல்காரர்கள் சாப்பிடும் போது உடலுக்கு வெப்பத்தைத் தரும். விஷ ஜந்துக்கள்
கடித்து விட்டாலும், விஷம் சீக்கிரம் உடலில் பரவாமல்
தடுக்கும். விஷத் தன்மையைக் குறைக்கும். விஷக் கடுகடுப்பு ஏறாது. சொறி சிரங்கு குணமாகும்.
தாமதித்த மாத விடாயை சீர்படுத்தும். தலைவலி தலைபாரம் நீங்கும்.