முடற்கற்றான் மூலிகையின் மருத்துவ குணங்கள்

முடற்கற்றான் மூலிகையின் மருத்துவ குணங்கள்






மாற்றடுக்களில் அமைந்த பற்களைப் போன்ற வடிவ இலைகளையும் 

கோணங்களில் இறகுள்ள காய்களையும் கொண்ட கொடியினத்தை சேர்ந்தது. 

மழைக் காலங்களில் மேட்டு நிலங்களிலும் தானே வளரக் கூடியவை.

 முடக்கு வாதத்தை வராமல் தடுப்பதாலும், மெல்ல மெல்ல முடக்கு வாதத்தை குணப்படுத்தும்

 மருத்துவம் பெற்றதால் இதற்கு முடக்கத்தான் மற்றும் முடக்கற்றான் என்ற பெயர் வழங்கப்படுகிறது.


தேவையான பொருட்கள்


முடக்கற்றான்


இலைகள்


அரை


கிலோ


மிளகாய்


4


வெங்காயம்


100 கிராம்


பூண்டு


25 கிராம்


இஞ்சி


கோலியளவு


புளி


கோலியளவு


50 மில்லி


எண்ணெய்


தக்காளி


2


உப்பு


தேவையான அளவு


தாளிக்க


கடுகு, கருவேப்பிலை




செய்முறை முடற்கற்றான் மூலிகையின் மருத்துவ குணங்கள்


முதலில் முடக்கற்றான் இலைகளை


பழுப்பு இலைகளில்லாமல் கொடியின் கொழுந்துகளையும் சேர்த்து சுத்தம் 

செய்து, வாணலியில் போட்டு வதக்கி, கருகிவிடாமல் எடுத்துக் கொள்ளவும். இல்லையெனில் வேகவைத்தும் கொள்ளலாம்.


பிறகு வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளிகளை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

 கூடவே இஞ்சி புளியையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு சூடு ஆறிய உடன் உரலிலோ, 

மிக்சியிலோ அரைத்துக் கொண்டு தாளித்துக் கொள்ளவும்.


மூலிகை குணங்கள்


வாதப்பிடிப்புகள், உடல் வலி அசதி நீங்கும். மலகட்டு, 

கீல் பிடிப்பு, குதிக்கால் வாதம், மூலநோய் போன்றவை குணமாகும். காது வலி குணமாகும். காரம் 

குறைத்து பயன்படுத்தும் போது இதன் குணங்கள் அதிகமாகும்.





Post a Comment (0)
Previous Post Next Post